search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் துன்புறுத்தல் ஒழிப்பு நடவடிக்கை"

    நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, சமூக பொறுப்புணர்வை, மீடூ இயக்கம் கற்றுத் தந்திருப்பதாக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கூறியுள்ளார். #MeToo #PVSindhu
    ஐதராபாத்:

    பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுப்பது மற்றும் பணியிடத்தில் பெண்கள் பாலியல் தொந்தரவுகளை எதிர்கொள்வது தொடர்பாக, ஐதராபாத் காவல்துறை சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கலந்துகொண்டு பேசியதாவது:-



    மீடூ  பிரச்சாரம், மக்களின் எண்ணத்தில் பல மாற்றங்களை புகுத்தியுள்ளது. மேலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சமூகத்தின் மீதுள்ள பொறுப்பினையும்  கற்பித்துள்ளது.

    பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பு, பாலியல் துன்புறுத்தல் போன்ற பிரச்சனைகளில் இருந்து வெளிவர, ஐதராபாத் காவல்துறை ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. பாலியல் துன்புறுத்தல் என்பது ஒரு வகையான சமூக பாகுபாட்டினை குறிக்கிறது. இது ஏற்கவியலாத குற்றமாகும்.

    தற்போது இந்த மீடூ பிரச்சாரம் மூலம் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் குறித்த விழிப்புணர்வு   ஏற்பட்டுள்ளது. இப்போது இந்தியாவில் சமூகம் மாபெரும் மாற்றத்தினை கண்டுள்ளது.

    பெண்கள் பணிக்கு செல்லக்கூடாது என்கிற நிலை மாறி, தற்போது ஆணும் பெண்ணும் சமம் எனும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பெண்கள் மிக உறுதியாகவும், தங்கள் மீது நம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும் என்பது என் கருத்து.

    இவ்வாறு அவர் பேசினார். #MeToo #PVSindhu

    ×